விவாகரத்து விவகாரம் - மிகுந்த மனஉளைச்சலில் சமந்தா... நீதிமன்றத்தை நாட முடிவு?

cinema-viral-news
By Nandhini Sep 30, 2021 04:07 AM GMT
Report

விவகாரத்து விவகாரம் தொடர்பாக பரப்பப்படும் செய்திகளால் தான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதால் நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு செய்திருக்கிறார்.

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் க்யூட் நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகர் சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் சமந்தாவின் நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியானது. இந்தத் தொடரில் படுக்கையறை காட்சிகளில் படுமோசமாக நடித்ததாக நடிகை சமந்தா மீது குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தார்கள். இதனால் குடும்பத்தில் சண்டை வெடித்ததால் சமந்தா, தனது குடும்ப பெயரான அக்கினேனி என்பதை நீக்கி வெறும் எஸ் மட்டும் வைத்தார்.

இதனால் சமந்தாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது. இதனையடுத்து, இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும், இதற்காக நாகஜூனா குடும்பத்தினர் ரூபாய் 50 கோடி ஜீவனாம்சம் வழங்க இருப்பதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்துக் கொண்டிருக்கிறது.

இது குறித்து தொடர்ந்து அவதூறு செய்திகள் வெளியாகி வருவதால் கடுப்பான சமந்தா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளாராம். அப்படி நடவடிக்கை எடுத்தால்தான் இந்தப் பிரச்சனைக்கு முடிவு வரும் என்று தெரியவந்துள்ளது. 

விவாகரத்து விவகாரம் - மிகுந்த மனஉளைச்சலில் சமந்தா... நீதிமன்றத்தை நாட முடிவு? | Cinema Viral News