‘சமந்தாவுடன் நடிக்க நான் விரும்புகிறேன்...” - பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர்

cinema-viral-news
By Nandhini Sep 29, 2021 02:22 AM GMT
Report

நான் நடிகை சமந்தாவுடன் நடிக்க விரும்புகிறேன் என்று பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் திருமணத்திற்குப் பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் ஈழப்பெண் ராஜியாக நடித்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளார். அவர் நடிப்பில் விரைவில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில், பாலிவுட் முன்னணி நடிகர் ஷாகித் கபூர் சமந்தாவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடனான கேள்வி ஒன்றிக்கு பதிலளித்து பேசுகையில், ‘தி ஃபேமிலிமேன் 2’ வில் சமந்தாவின் நடிப்பைப் பற்றிக்கூறுங்கள்” என்று கேட்டதற்கு “சமந்தாவின் நடிப்பை முழுமையாக நேசித்தேன். சமந்தாவுடன் நடிக்க விரும்புகிறேன்” என்று உற்சாகமாக பதிலளித்துள்ளார். 

‘சமந்தாவுடன் நடிக்க நான் விரும்புகிறேன்...” - பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் | Cinema Viral News