இறக்கும் தருவாயிலும் ஒருவரை மட்டும் பார்க்க ஆசைப்பட்ட எஸ்.பி.பி - அது யாருன்னு தெரியுமா?

cinema-viral-news
By Nandhini Sep 28, 2021 04:25 AM GMT
Report

தமிழ் சினிமா கடந்த வருடம் யாருமே எதிர்ப்பார்க்காத பிரபலங்களின் மரண செய்தி நம்மை அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. அதில் முக்கியமான ஒருவர் பாடகர் எஸ்.பி.பி. பாடகரின் முதல் நினைவு நாள் வந்தது. எல்லோரும் அவருக்காக பிராத்தனை செய்தார்கள்.

கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொரோனாவிலிருந்து மீண்டார். இருப்பினும் அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது.

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்நிலையில் பாடும் நிலா, பாட்டுத்தலைவன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சில பிரபலங்கள் பாடகரின் நினைவு நாளுக்காக ஒன்று கூடினார்கள்.

அதில் இளையராஜா பேசுகையில், பாலுவுக்கும் எனக்கும் எப்படிபட்ட உறவு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். மருத்துவமனையில் மிகவும் சீரியஸாக இருந்தபோது கூட என்னை மட்டுமே பார்க்க விரும்பி இருக்கிறார். ஒரு போனில் இருந்த என்னுடைய புகைப்படத்திற்கு முத்தமும் கொடுத்திருக்கிறார். இதில் இருந்தே தெரிகிறது அவரது மனதில் எனக்கு எவ்வளவு இடம் கொடுத்தார் என்று குரல் தழுதழுவ பேசினார். 

இறக்கும் தருவாயிலும் ஒருவரை மட்டும் பார்க்க ஆசைப்பட்ட எஸ்.பி.பி - அது யாருன்னு தெரியுமா? | Cinema Viral News

இறக்கும் தருவாயிலும் ஒருவரை மட்டும் பார்க்க ஆசைப்பட்ட எஸ்.பி.பி - அது யாருன்னு தெரியுமா? | Cinema Viral News

இறக்கும் தருவாயிலும் ஒருவரை மட்டும் பார்க்க ஆசைப்பட்ட எஸ்.பி.பி - அது யாருன்னு தெரியுமா? | Cinema Viral News