சோனு சூட் வெளியிட்ட ஒற்றை புகைப்படம் - வேற லெவலில் வைரல்

cinema-viral-news
By Nandhini Sep 27, 2021 06:32 AM GMT
Report

ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார்.

பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார். விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி, பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கிராமத்தில் மாணவர்களுக்கு ஒழுங்காக சிக்னல் கிடைக்க மொபைல் டவர் அமைத்தது என எண்ணற்ற உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.

சோனு சூட்டின் நல உதவிகளை திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். மேலும் அவரை பஞ்சாபின் அடையாளம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து கவுரவித்தது.

இந்நிலையில், சோனு சூட் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெறித்து வருகிறார்கள். 

இதோ அந்த புகைப்படம் -