‘திருமணம் செய்யும் நடிகை அனுஷ்கா...’ பிரபல ஜோதிடர் வெளியிட்ட தகவல் - டுவிட்டரில் வைரல்

cinema-viral-news
By Nandhini 1 வருடம் முன்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. தற்போது கடந்த சில நாட்களாக அனுஷ்காவின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல் கசிந்து வருகிறது.

முதலில் பாகுபலி வில்லன் நடிகர் ராணாவை அனுஷ்கா திருமணம் செய்ய இருப்பதாக தகவல் பரவியது. பிறகு, பாகுபலி நாயகன் பிரபாஸ் உடன் அனுஷ்கா காதல் வலையில் விழுந்ததாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்தார் நடிகை அனுஷ்கா.

இந்நிலையில், தெலுங்கு சினிமா இயக்குனர் ஒருவரை அனுஷ்கா காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதற்கிடையில், அனுஷ்கா ஷெட்டி திருமணம் பற்றி ஒரு பிரபல ஜோதிடரால் கணித்துள்ளார். நடிகை திருமணம் குறித்து பண்டிட் ஜெகநாத் குருஜியின் கருத்து சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அவரது கூற்றுப்படி, அனுஷ்காவின் திருமணம் 2023க்குள் நடக்க இருக்கிறது. அனுஷ்கா தனது வாழ்க்கையில் மிகவும் நேர்மையானவர் மற்றும் அவரது முகபாவனைகளின் அடிப்படையில், அனுஷ்கா ஒரு தொழிலதிபரை விட ஒரு வெளி நபரை திருமணம் செய்து கொள்வார். எனவே அனுஷ்கா 2023க்குள் திருமணம் செய்து கொள்வார் என்று அவர் கூறியிருக்கிறார்.

இவரின் இந்த தகவலை தற்போது சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

‘திருமணம் செய்யும் நடிகை அனுஷ்கா...’ பிரபல ஜோதிடர் வெளியிட்ட தகவல் - டுவிட்டரில் வைரல் | Cinema Viral News