ஒளிப்பதிவாளர் தந்தை திடீர் மரணம் - ஆறுதலாக உடன் நின்ற அருண் விஜய் - புகைப்படங்கள் வைரல்

cinema-viral-news
By Nandhini Sep 23, 2021 02:37 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் படம் ‘பாடர்’. இந்தப் படத்தை அறிவழகன் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெஃபி படேல் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படம் வருகிற நவம்பர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ‘பாடர்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் தந்தை கடந்த 18ம் தேதி உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

அந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் அருண் விஜய், ராஜசேகருக்கு நேரில் ஆறுதல் கூறியதோடு இறுதிச்சடங்கு முடியும் வரை ராஜசேகருக்கு ஆறுதலாக இருந்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அருண் விஜய்க்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.