அஜித் சார் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக ‘வலிமை’ இருக்கும் : கார்த்திகேயா நெகிழ்ச்சி
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பொங்கலையொட்டி ‘வலிமை’ படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ள தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நேற்று தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ‘வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூர் கார்த்திகேயாவின் புதிய போஸ்டரை வெளியிட்டிருந்தார்.
கார்த்திகேயாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்களை விட அஜித் ரசிகர்கள்தான் சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்த்தார்கள்.
இதில் நெகிழ்ந்துபோன கார்த்திகேயா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றி.குறிப்பாக, அஜித் சார் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. ‘வலிமை’ படம் அஜித் சார் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும். சிறந்த படமாக மாற்ற என்னுடைய சிறந்த நடிப்பை வழங்கியுள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார்.