அஜித்தின் ‘வலிமை’ பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி

cinema-viral-news
By Nandhini Sep 22, 2021 06:28 AM GMT
Report

அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படம் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ‘வலிமை’ படத்தின் முதல்பார்வை நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில், படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதையொட்டி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.