பிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய தீபிகா படுகோனே - வைரல் வீடியோ
சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதனையடுத்து, அவருக்கு பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே கடந்த வாரம் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விருந்து கொடுத்தார்.
இந்நிலையில், பிவி சிந்துவுடன் நடிகை தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடிய புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.
உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை தீபிகா படுகோனே, இப்புகைப்படங்களை வெளியிட்டு, 'பிவி சிந்துவுடன் இணைந்து கலோரிகளை எரித்துக் கொண்டிருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த அந்த புகைப்படங்கள் -