நீர் நிலைக்குள் பாய்ந்த கார் - விபத்தில் உயிரிழந்த பிரபல நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி
cinema-viral-news
By Nandhini
25 வயதான மராத்திய மொழி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே பயணம் செய்த கார் கோவா பகுதியில் உள்ள நீர் நிலைக்குள் விழுந்த விபத்தில், அவர் நீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்த விபத்து கோவாவின் அர்போரா பகுதியில் நடந்துள்ளது.
திங்கள் அன்று அதிகாலையில் இந்த விபத்து நடந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடிகையுடன் பயணித்த 28 வயதான ஷூபம் என்ற அவரது நண்பரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் நள்ளிரவு விருந்துக்கு சென்று திரும்பி வந்திருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். அதற்கு அடையாளமாக அவர்களது கை மூட்டுகளில் Wristband உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.