குஷ்பூ வெளியிட்ட ஒற்றை புகைப்படம் - இளம் நடிகைகளையே மிஞ்சிய அழகில்... - வைரல் புகைப்படம்

cinema-viral-news
By Nandhini Sep 22, 2021 04:24 AM GMT
Report

சமீபத்தில் உடல் எடையைக் குறைத்து குஷ்பூ வெளியிட்டு வரும் படங்கள் நெட்டிசன்களின் கவனம் ஈர்த்து வருகிறது. நடிகை குஷ்பு அரசியலில் குதித்து 3 கட்சிகள் மாறி பரபரப்பாக இருக்கிறார். அவ்வப்போது சினிமா, டிவியிலும் தலைகாட்டுகிறார். குஷ்பு சாதாரணமாகவே பப்ளியாக இருப்பார். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு மேலும் குண்டானார்.

அதுபற்றி அவரது ரசிகர்கள் யாரும் கவலைப்படவில்லை. குஷ்பு குண்டாக இருப்பது அவர்களுக்குப் பிடித்திருந்தது. இந்நிலையில், கடும் டயட் மற்றும் உடற்பயிற்சியில் உடல் இளைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார் குஷ்பு.

சில வாரங்கள் முன்பு உடல் மெலிந்த தோற்றத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். பத்து வயது குறைந்தது போலிருந்தது அதில் அவரது தோற்றம். இப்போது மீண்டும் சில படங்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது சமூகவலைத்தளத்தில் நடிகை குஷ்பூ ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், இளம் நடிகைகளையே மிஞ்சிய அழகில் நீல கலர் புடவையில் கொள்ளை அழகில் மின்னுகிறார். இதோ அந்த புகைப்படம் -