நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் - டுவிட்டரில் வைரல்

cinema-viral-news
By Nandhini Sep 22, 2021 03:29 AM GMT
Report

திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் ‘லாபம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘அனபெல் சேதுபதி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சந்தித்து உரையாடி இருக்கிறார். இது குறித்து, அவரது ட்விட்டர் பதிவில், “உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா’ என்று உற்சாகமுடன் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தை ஸ்ரீசாந்த் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது.

இதனையடுத்து, மாநில கிரிக்கெட் அணியில் தற்போது விளையாடி வருகிறார். இந்த 7 ஆண்டுகளில் ரியாலிட்டி டான்ஸ் ஷோக்களிலிலும் இந்தி பிக்பாஸ் சீசன் 12ம் பங்கேற்ற ஸ்ரீசாந்த் பிக்பாஸில் ரன்னராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் - டுவிட்டரில் வைரல் | Cinema Viral News