அதிர்ச்சி - ஷில்பா ஷெட்டி கணவரின் செல்போனிலிருந்து 119 ஆபாச வீடியோக்கள் - போலீசார் பறிமுதல்

cinema-viral-news
By Nandhini Sep 21, 2021 05:57 AM GMT
Report

ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் செல்போனிலிருந்து 119 ஆபாச வீடியோக்களை போலீசார் கைப்பற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக கடந்த ஜூலையில் ராஜ் குந்த்ரா மும்பை போலீசார் ராஜ் குந்த்ராவை கைது செய்தனர். அவரது நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரியும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், 2 மாதங்களுக்கு பின்னர் குந்த்ராவுக்கு சமீபத்தில் மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இதனையடுத்து தற்போது வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக குந்த்ராவின் செல்போன், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிரைவ் ஆகியவற்றிலிருந்து சுமார் 119 ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வீடியோக்களை ரூ.9 கோடிகளுக்கு விற்பனை செய்ய ராஜ் குந்த்ரா திட்டமிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

அதிர்ச்சி - ஷில்பா ஷெட்டி கணவரின் செல்போனிலிருந்து 119 ஆபாச வீடியோக்கள் - போலீசார் பறிமுதல் | Cinema Viral News