ஊர் சுற்ற 'தல' அஜித்துக்கு ஐடியா கொடுத்த பெண் இவர்தானாம்? டுவிட்டரில் ட்ரெண்ட்டிங்

cinema-viral-news
By Nandhini Sep 21, 2021 02:44 AM GMT
Report

உலகம் முழுக்க மோட்டார் பைக்கில் தனியாக பயணம் செய்த சாகசப் பெண்ணான மரல் யாசர்லூவை நடிகர் அஜித் டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

‘வலிமை’ படத்தின் ஷூட்டிங்கை ரஷ்யாவில் நிறைவு செய்துள்ளார் நடிகர் அஜித். அங்கு தனக்கு பிரியமான பைக்கில் தனியாக 5,000 கி.மீ சுற்றி வந்ததாக தகவல்கள் வெளியாகின. ரஷ்யாவில் அஜித் பைக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது டெல்லி சென்றுள்ள நடிகர் அஜித், அங்கு தாஜ்மஹாலை ரசித்ததுடன் அல்லாமல், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

இதைத் தொடர்ந்து , உலகம் முழுக்க பைக்கிலேயே சுற்றி வந்த சாகசப் பெண்மணியான மாரல் யாசர்லூவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் அஜித். மேலும் , எதிர்காலத்தில் பைக்கில் உலக பயணம் மேற்கொள்ள தேவையான ஆலோசனையும் கேட்டறிந்துள்ளார். மாரல் யாசர்லூ இதுவரை 7 கண்டங்களையும், 64 நாடுகளையும் பைக்கிலேயே சுற்றிய, 1 லட்சத்திற்கும் அதிகமான கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார்.

மாரல் யாசர்லூ உடனான இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தையும் , தகவலையும் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 39 வயதாகும் யாசர்லூ ஈரானை சேர்ந்தவர். 2004ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புக்காக அவர் இந்தியா வந்தார். இவர் பைக் ரேஸர், பேஷன் டிசைனர், தன்னம்பிக்கை பேச்சாளர் என்று பன்முகத்திறமை கொண்டவர்.