ஆபாச பட வழக்கு - பிரபல நடிகையின் கணவருக்கு கிடைத்தது ஜாமீன்!
ஆபாச பட வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது. தமிழில் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரின் கணவர் ராஜ் குந்த்ரா.
தொழிலதிபரான இவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். இவர் ஆபாசப் படங்களைத் தயாரித்து மொபைல் செயலிகளில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, மும்பை போலீசார் அதிரடியாக ராஜ் குந்த்ராவை கைது செய்தனர்.
ராஜ் குந்த்ரா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ஜாமீன் கோரி தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தாக்கல் செய்த மனுக்களை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில், மீண்டும் ஜாமீன் கோரி, மும்பை நீதிமன்றத்தில் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ரூ. 50 ஆயிரம் பிணைத் தொகையுடன், ஜாமீன் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.