ரூ.20 கோடி வரி ஏய்ப்பு விவகாரம் - நடிகர் சோனு சூட் டுவிட்டரில் விளக்கம்

cinema-viral-news
By Nandhini Sep 20, 2021 09:33 AM GMT
Report

வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் நடிகர் சோனு சூட் . பிரபல வில்லனாக வலம் வருபவர் நடிகர் சோனு சூட். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துள்ளார். கொரோனா பரவல் காலகட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உதவி செய்து வந்தார்.

வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட மாணவர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்கவும் உதவி புரிந்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் அவரை மக்கள் பாராட்டினார்கள். அவர்தான் நிஜ ஹீரோ என்று சமூக வலைதளங்கள் வர்ணித்தனர். இதனையடுத்து, தெலுங்கானாவில் அவருக்கு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல்வேறு மருத்துவ உதவிகள் மற்றும் பொருளாதார சூழலால் கல்வி கற்க முடியாத மாணவ, மாணவியர்களுக்கும் உதவி செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். இந்நிலையில், அவர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சோனு சூட் மற்றும் அவர் கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது

. இதில் அவர் 20 கோடி ரூபாய் வரை அவர் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும், அவர் பெயரைக் குறிப்பிடாமல் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த சோதனை குறித்து நடிகர் சோனு சூட், தனது டுவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், நீங்கள் எப்போதும் உங்கள் தரப்பு கதையை சொல்ல வேண்டியதில்லை. காலம் அதை சொல்லும். நான் வலிமையுடனும் திறந்த மனதுடனும் மக்களுக்காக சேவை செய்ய என்னை அர்ப்பணித்துள்ளேன். என் அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றவும் தேவையானவர்களுக்கு உதவுவதற்காகவுமே காத்திருக்கிறது. கடந்த 4 நாட்களாக சில விருந்தினர்களை சந்திப்பதில் பிசியாக இருந்ததால், உங்கள் சேவைக்காக வர இயலவில்லை. இப்போது மீண்டும் வந்துவிட்டேன். என் பயணம் தொடர்கிறது என்று பதிவிட்டுள்ளார்.