நடிகை மீரா மிதுன் லாக்கப் ரிலீஸுக்கு பிறகு ‘பேய காணோம்’ படம் வெளியாகும் - இயக்குநர் அன்பரசன்
நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் சைபா் குற்றப்பிரிவினா் மீரா மிதுன் மீது எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.
தலைமறைவாக இருந்த மீரா மிதுனை போலீசார் கேரள மாநிலம் ஆலப்புழையில் கடந்த 14ம் தேதி கைது செய்தனா். இதனையடுத்து, மீரா மிதுன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேய் வேடத்தில் மீரா மிதுன் நடிக்கும் "பேய காணோம்" திரைப்படத்தை இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்குகிறார்.
குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் R.சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு " பேய காணோம் " என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளார். இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் . இந்நிலையில், "பேய காணோம்" படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா சென்னை சின்மையா நகரில் நடைப்பெற்றது.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஜாகுவார்தங்கம் படத்தின் டைட்டிலை வெளியிட்டார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அன்பரசன் சமூக வலைதளங்களில் நடிகைகளைக் கொச்சைப்படுத்துகிறவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
நடிகை மீரா மிதுன் லாக்கப் ரிலீஸ்க்கு பிறகு 'பேய காணோம்' திரைப்படம் வெளியாகும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.