க்ரீன் சிக்னல் கொடுத்த நடிகர் விஜய்… - பரபரப்பு பட்டியல் ரெடி! உற்சாகத்தில் ரசிகர்கள்
வழக்கமான உள்ளாட்சி தேர்தல் போல் அல்லாமல் இம்முறை நடைபெறும் தேர்தல் கொஞ்சம் ஸ்பெஷலாகத்தான் இருக்கும். அப்படி என்ன ஸ்பெஷல் என்றால், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் களமிறங்குகிறது என்பதுதான். ஏற்கெனவே எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என நடிகர்கள் அரசியலில் இறங்கினார்கள்.
சமீபத்தில் கமலும் அரசியலில் இறங்கினார். எப்போதுமே தமிழ்நாட்டு அரசியல் உள்ளாட்சியின் வார்டுகளிலிருந்து தான் ஆரம்பமாகும். எம்ஜிஆர் என்ற நாயக பிம்பம் இருந்தாலும் உள்ளாட்சியில் பலப்படுத்தியதால் தான் அவர் ஆரம்பித்த அதிமுக வெற்றியை உரித்தாக்கியது. இதை விஜய் சரியாகப் புரிந்து கொண்டார். நேற்று தான் இந்த அறிவிப்பு வெளியானது.
சென்னையை அடுத்துள்ள பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்தின் தலைமையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட நிர்வாகிகளுடன் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதில் தான் சுயேச்சையாகப் போட்டியிடலாம் என்ற முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களோ அடுத்தக்கட்டத்தை நோக்கி புறப்பட்டு விட்டார்கள் என தற்போதைய தகவல் சொல்கிறது. ஆம் செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
பெரிய வெளிக்காடு ஊராட்சி மன்ற 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுதா, கொடூர் ஊராட்சியில் 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இயக்கத்தின் கிளை தலைவர் சத்யா ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள்.
அதேபோல பரமேஸ்வரிமங்கலம் ஊராட்சியில் 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அப்பகுதி கிளை தலைவர் பாலாஜி என்பவரும் நீலமங்கலம் ஊராட்சியில் 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒன்றிய இணை செயலாளர் திருநாவுக்கரசும் களமிறங்குகிறார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடப் போவதாகவும் அடுத்த தகவல் வெளியாகி இருப்பதால், ரசிகர்களுக்கு இது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.