காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நயன்தாரா - வைரல் வீடியோ

cinema-viral-news
By Nandhini Sep 18, 2021 05:19 AM GMT
Report

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா, இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார். நட்சத்திர ஜோடிகளாக இவர்கள், ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்தும் வருகிறார்கள்.

இதனையடுத்து, சமீபத்தில் நடந்த டிவி நிகழ்ச்சியின் தனது காதலை உறுதிப்படுத்தினார் நடிகை நயன்தாரா. அதோடு தங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டதாக நயன்தாரா கூறினார். தற்போது விக்னேஷ் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' உள்ளிட்ட பல படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார். இந்த கொண்டாட்டத்தில் வீடியோவையும் நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.