பெண்களை பாலியல் ரீதியில் அல்லாத வேறு வகையில் துன்புறுத்துகிறார்கள் - கொந்தளித்த ஓவியா

ஓவியா என்று சொன்னாலே எனக்கு ஞாபகம் வருவது ஒரு டைப்பான ஹேர் ஸ்டைல்தான். ஓவியாவை வெள்ளந்தி என்று சொல்வதா? இல்லை, பெண் சுதந்திரம் என்று சொல்வதா? என்று எனக்கு தெரியவே இல்லை. ஓபனாக.. நான் தண்ணி அடிப்பேன், நான் பப்புக்கு போவேன்.. யாரை வேண்டுமானாலும் காதலிப்பேன்..

யார் கூட வேண்டுமானாலும் பாய்பிரண்டாக இருப்பேன் என்று ஓபனாக ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார் ஓவியா என்று கூறியிருக்கிறார் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன். சினிமாவை விட்டு ஓடிய பெண்கள் என்ற தலைப்பில் அவர் மேலும், மகாபலிபுரத்தில் தங்காத ஓட்டலே கிடையாது என்று சொல்கிற அளவுக்கு வந்துவிட்டார் நடிகை ஓவியா. நடிப்பு தொழிலோடு சேர்ந்து அட்ஜெஸ்மெண்ட் இருந்தால் பரவாயில்லை.

வெறும் அட்ஜெஸ்மெண்ட் மட்டும் இருந்தால் அந்த நடிகைக்கு வேற பெயர் சொல்லி முத்திரை குத்தி தள்ளிவிட்டு சென்று விடுவார்கள். நடிப்பு திறமை இருந்தும், வேற மாதிரி வருமானத்தை ஈட்ட சம்மதித்து அந்த வழி நடந்ததால் ஓவியாவுக்கு மார்க்கெட் இல்லாமல் போய் விட்டது என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

இது குறித்து, இது தொடர்பான வீடியோவை தனது டுவிட்டர் பதிவில் ஷேர் செய்த நடிகை ஓவியா, இதற்குப் பெயர்தான் பாலியல் ரீதியில் அல்லாத வேறு வகையில் பெண்களைத் துன்புறுத்துவது’ என்று தனது மன உளைச்சலை வெளிப்படுத்தியிருக்கிறார். ஓவியாவின் இந்த டுவிட்டை ரீ டுவிட் செய்திருக்கும் பத்திரிகையாளர் சோனியா அருண்குமார், ‘பல பெண்கள் இவரைப் பற்றி பேசிட்டாங்க. எப்போ இவர் மேல நடவடிக்கை எடுக்கப்போறாங்க?’என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். சோனியா அருண்குமாரின் டுவிட்டை ரீ டுவிட் செய்திருக்கிறார் பாடகி சின்மயி.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்