பிறந்தநாள் பரிசை கண்டு கண்கலங்கி நெகிழ்ந்த வடிவேலு: இதோ அந்த புகைப்படம்

cinema-viral-news
By Nandhini Sep 14, 2021 06:48 AM GMT
Report

தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த காமெடி நடிகர்களில் ஒருவரான வைகை புயல் வடிவேலுவிற்கு ரசிகர்களின் மனதில் ஒரு தனி இருக்கிறது. சிரிக்க வைப்பது என்பது சாதாரணம் கிடையாது. அது ஒரு கலை. வடிவேலு 1960ம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி பிறந்தார். அவரது தாய் வைதீஸ்வரி, தந்தை நடராஜன்.

தற்போது தமிழ் சினிமாவில் வடிவேலு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், அவரது பிறந்த நாளை ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டத்தில் ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வடிவேலுவின் இந்த பிறந்தநாளுக்கு அவருக்கு கிடைத்த ஒரு பரிசு அவரை கண்கலங்க வைத்துள்ளது.

அவரது தாயின் ஓவியத்தை பரிசாகப் பெற்றார் நடிகர் வடிவேலு. தாயின் ஓவியத்தைக் கண்ட வடிவேலு கண்கலங்கி மிகவும் நெகிழ்ந்து போனார். கோடிக்கணக்கான மக்களை சிரிக்க வைத்த முகத்தில் சிறு ஏக்கத்தை காண முடிந்தது. கைபிள்ளை கைக்குழந்தையான தருணமாக அத்தருணம் மாறியது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு தன் தாயின் படத்துக்கு பாசமாக முத்தமிட்டார். தாயின் மீது அவர் வைத்துள்ள அளவுக்கடங்காத பாசத்தை நேசமணியிடம் காணமுடிந்தது.  

பிறந்தநாள் பரிசை கண்டு கண்கலங்கி நெகிழ்ந்த வடிவேலு: இதோ அந்த புகைப்படம் | Cinema Viral News

பிறந்தநாள் பரிசை கண்டு கண்கலங்கி நெகிழ்ந்த வடிவேலு: இதோ அந்த புகைப்படம் | Cinema Viral News

பிறந்தநாள் பரிசை கண்டு கண்கலங்கி நெகிழ்ந்த வடிவேலு: இதோ அந்த புகைப்படம் | Cinema Viral News