விபத்தில் சிக்கிய நடிகர் சாய் தரம் தேஜ் - ICUவில் தொடர்ந்து தீவிர சிகிச்சை - சோகத்தில் ரசிகர்கள்
cinema-viral-news
By Nandhini
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சாய் தரம் தேஜ். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பைக் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தால் அவர் சுய நினைவை இழந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் அவருக்கு சில சர்ஜரி எல்லாம் செய்யப்பட்டுள்ளது. குணமடைவார் என்று பார்த்தால் இன்னும் ICUவில் தான் இருக்கிறார்.
தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் அவருடைய உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள். ரசிகர்கள் சாய் சீக்கிரம் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்று தங்களது சோகமான பதிவுகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.