"அஜித் சார் ஹாய் சொன்ன தருணம்...” அஜித்தை புகழ்ந்து தள்ளிய நடிகர் - டுவிட்டரில் ட்ரெண்டாகும் புகைப்படம்

cinema-viral-news
By Nandhini Sep 13, 2021 06:01 AM GMT
Report

நடிகர் அஜித் ரசிகர்களின் மனங்களின் அசைக்க முடியாத இடத்தை பிடித்து, அன்பை பெற்றவர். அவர் குறித்த ஒவ்வொரு செய்தியும் இணையத்தில் டிரெண்டாகி விடும். தற்போதும் அவரைப் பற்றிய ஒரு செய்தி வைரலாகி வருகிறது. 2008ம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் ராஜுசுந்தரத்தின் இயக்கத்தில் 'ஏகன்’ படம் வெளிவந்தது.

இப்படத்தில் அஜித்துடன் கல்லூரி மாணவராக நடித்த நடிகர் நவ்தீப் பலரது கவனத்தை ஈர்த்தார். அப்போதே நடிகர் நவ்தீப் அஜித்துக்கு பெரிய ரசிகராகவும் மாறினார். தற்போது, பல ஆண்டுகளுக்கு பிறகு, அஜித்துடன் இருக்கும் படங்களை நடிகர் நவ்தீப் வெளியிட்டுள்ளார்.

அவை ட்விட்டரில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் ஹைதராபாத்தில் பைக் ரேஸ் நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது, அந்த நிகழ்வில் நடிகர் நவ்தீப்பும் கலந்துகொண்டார். அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “அஜித் சார் அன்பால் நிறைந்தவர். அவர் ‘ஹாய்’ சொன்ன விதம், நீண்ட நாட்களாக தெரிந்த ஒருவரை சந்தித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அவருடைய எளிமையையும் பண்பையும் பார்ப்பதை ஒரு அனுபவமாக உணர்கிறேன். அஜித் சார் உண்மையிலேயே அற்புதமான மனிதர்!! ” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.