‘ஐன்ஸ்டீன் உயிரோடு இருந்திருந்தால் என்னை நல்லா செருப்பாலேயே அடிச்சிருப்பாரு...’ - யோகி பாபு

cinema-viral-news
By Nandhini Sep 11, 2021 09:20 AM GMT
Report

சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘டிக்கிலோனா’. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சயின்ஸ் ஃபிக்ஷன் காமெடி ஜோனரை மையப்படுத்திய இப்படத்தில் யோகிபாபு ஒரு விஞ்ஞானியாக நடித்துள்ளார். பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் பெயர் யோகிபாபு கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

நேற்று டுவிட்டரில் ஸ்பேசசில் டிக்கிலோனா படக்குழுவினர் தங்களது வெற்றியை கொண்டாடினார்கள். அப்போது பேசிய யோகிபாபு, ‘என்னைய போய் ஐன்ஸ்டீனா நடிக்க வெச்சிருக்காங்க. ஐன்ஸ்டீன் இப்போ உயிரோடும் மட்டும் இருந்திருந்தா என்னைய செருப்பாலயே நல்லா அடிச்சிருப்பாரு” என்று பேசினார். “அது மாதிரி எதுவும் நடக்குறதுக்கு முன்னாடி நானே அவரோட கால்ல பட்டுன்னு விழுந்து மன்னிப்பு கேட்டிருப்பேன்” என்று சென்னார்.

அப்போது படக்குழுவினர் சயின்டிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் படமாக டிக்கிலோனா இருக்கும் என யோகிபாபுவை கிண்டலடித்தார்கள். அதற்கு யோகிபாபு, “நான் ஏதோ ஃபார்முலாவை தப்பா சொல்லிட்டேன்னு எல்லாரும் பேசிக்குறாங்க. நான் ஐன்ஸ்டீனா நடிச்சத கூட ஏத்துக்குவாங்களாம். ஆனா நான் ஃபார்முலாவை தப்பா சொன்னா ஏத்துக்க மாட்டாங்களாம்” என்று கூறி சிரித்தார். “உண்மையில் அந்த ஃபார்முலா என்னுடைய கார் நம்பர்” என்று யோகிபாபு சொல்ல நேற்று டுவிட்டரில் இணைந்திருந்த சுமார் 1500 ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து விட்டனர். 

‘ஐன்ஸ்டீன் உயிரோடு இருந்திருந்தால் என்னை நல்லா செருப்பாலேயே அடிச்சிருப்பாரு...’ - யோகி பாபு | Cinema Viral News