‘ஐ ஆம் பேக்....’ - அர்ச்சனா இன்ஸ்டாவில் மகிழ்ச்சிப் பதிவு
சின்னத்திரை பிரபலமான நடிகை அர்ச்சனா மூளை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கி உள்ளார்.
நடிகை அர்ச்சனா விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி எனப் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு களை கட்டினார். இதனால், இன்னும் அவர் பிரபலமானார். ஆனால், எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட அவர் வெளியில் வந்து பிக்பாஸ் பற்றி சரமாரிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில், அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலை உருவானது. தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு அவர் சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை முடிந்ததும், அனைத்து நிகழ்ச்சிகளிலிருந்து சிறிது மாதம் தள்ளி வைத்து விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு வந்தார்.
அவருக்கு தற்போது உடல் நிலை சீராகி விட்டதால் மீண்டும் அவர் களத்தில் இறங்கி இருக்கிறார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அர்ச்சனா. அதில் ஐ ஆம் பேக் என்று தலைப்பு கொடுத்திருக்கிறார். விளம்பரப் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்துக்கொண்ட வீடியோ என்று அவர் விளக்கியுள்ளார். அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.