‘பிக்பாஸ் 5’ என்ட்ரி கொடுக்கப் போகும் பிரபல பாடிபில்டர்! யார் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்ட பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
தற்போது 5-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க இருக்கிறார். தற்போது கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் சீசன் 5 பற்றிய தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 2 புரொமோக்கள் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலானது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் கோபிநாத் ரவி என்ற மாடல் பிக்பாஸில் நுழைய இருப்பதாக தகவல்ள் வெளியாகியுள்ளன. இவர் ஒரு பாடி பில்டர் ஆவார். இது தொடர்பாக Imadh என்ற ட்விட்டர் யூசர் வெளியிட்ட பதிவில், கோபிநாத் ரவி பிக்பாஸ் தமிழ் சீசன்-5 ல் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கேப்ஷன் செய்துள்ளார். இதனிடையே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பிரபலங்கள் யார் யார் என்று விரைவில் தெரியவரும்.
Looking forward #GopinathRavi into #biggbosstamil5#biggbosstamil https://t.co/qnIW3pnkWU pic.twitter.com/JzsWqpC2ZZ
— Imadh (@MSimath) September 5, 2021