ஷாருக்கான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய்? வெளியான புதிய அப்டெட்

cinema-viral-news
By Nandhini Sep 08, 2021 12:23 PM GMT
Report

ஷாருக்கான் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்குநர் அட்லி கொடுத்துள்ளார். இதனையடுத்து, இயக்குநர் அட்லி தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

ஷாருக்கானுக்கு இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஒரு கேரக்டரில் ராணுவ அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இரு கதாநாயகிகள் நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா மற்றும் சானியா மல்ஹோத் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராணா டகுபதி, யோகிபாபு, ப்ரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அனிரூத் இணைந்து இசையமைக்க உள்ளனர். ராணுவம் தொடர்பாக படமாக இப்படம் உருவாகவுள்ளதால் படத்திற்கு ‘ஜவான்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு புனேவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் இணைந்து, ஒரு பாடலுக்கு நடனம் ஆடவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. 

ஷாருக்கான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய்? வெளியான புதிய அப்டெட் | Cinema Viral News