‘செம்பருத்தி’ சீரியலிருந்து விலகும் பிரபல நடிகை - இதுதான் காரணமாம்
ஜீ தமிழ் சீரியல்களில் ‘செம்பருத்தி’ சீரியலுக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ஏராளமான பார்வையாளர்கள் உள்ளனர்.
இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்தும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிராமத்திலிருந்து வந்து பணக்கார வீட்டில் வேலை செய்யும் பெண், அந்த வீட்டிற்கே மருமகளாகும் குடும்ப கதைதான் இந்த சீரியல். இந்த சீரியலில் ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி என்ற கம்பீரமான பணக்கார பெண்மணி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை பிரியா ராமன் நடித்து வந்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது இந்த சீரியல் வில்லியாக ஐஸ்வர்யாவுக்கும், கதாநாயகி பார்வதிக்கு இடையே நடக்கும் மோதலை வைத்து விறுவிறுப்பாக இந்த சீரியல் போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால், கடந்த சில மாதங்களாக இந்த சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்து வருகிறது. கதை நகரும் விதவே இந்த தொய்வுக்கு காரணமாக என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த சீரியலில் அகிலாண்டேஸ்வரி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிரியா ராமன் விலகுவதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் நடித்து வருகிறார். செந்தூரவே சீரியலின் வரவேற்பை அடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.