நடிகர் ராணாவிடம் திடீரென விசாரணை தொடங்கிய அமலாக்கத்துறை போலீசார்!

cinema-viral-news
By Nandhini Sep 08, 2021 08:36 AM GMT
Report

நடிகர் ராணாவிடம் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது பிரபல தெலுங்கு நடிகர் ராணா, ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றார். நடிகர் ராணா உட்பட நவ்தீப், ரவிதேஜா, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகைகள் சார்மி கவும், ரகுல் ப்ரீத் சிங் என 12 பேர் மீது போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

2017ம் ஆண்டு போடப்பட்ட போதைப்பொருள் வழக்கு அமலாக்கத்துறையின் வசம் இருக்கிறது. இந்தப் போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணை நடத்திவரும் அமலாக்கத்துறை, தற்போது நடிகர் ராணவிடம் விசாரணை நடத்தி வந்துக் கொண்டிருக்கிறது. முன்னதாக, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகைகள் சார்மி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் போதைப்பொருள் மட்டுமல்ல, பண மோசடியும் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நடிகர் ராணா, ஹைதராபாத்தில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார். தற்போது நடிகர் ராணாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ள அமலாக்கத்துறை, அவரது வங்கி பண பரிமாற்ற நடவடிக்கைகளை விசாரிப்பதற்காக அவரை அழைத்திருக்கிறார்கள்.

போதைப்பொருள் கடத்துபவர்கள் மீது தெலுங்கானா கலால் அமலாக்க சிறப்புப் புலனாய்வு குழுவினர் வழக்கு தொடுத்திருக்கிறது. போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், திரையுலகைச் சேர்ந்த யார் மீதும் இது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.