பிரபல நடிகரின் தாயார் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம் !

cinema-viral-news
By Nandhini Sep 08, 2021 08:18 AM GMT
Report

பாலிவுட் உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அக்ஷய் குமார். இவர், தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘ராட்சகன்’ இந்தி ரீமேக்கில் படத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே அக்ஷய் குமார் தயார் அருணா பாட்டியா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். தனது தாயின் மரண செய்தியை அறிந்து அக்ஷய் குமார், படப்பிடிப்பு பணிகளை ரத்து செய்துவிட்டு லண்டனிலிருந்து மும்பைக்கு புறம்பட்டு வந்திருக்கிறார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அக்ஷய் குமார் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், எனது தயார் இன்று காலை அமைதியான முறையில் உலகை விட்டு நீங்கி, தந்தையுடன் இணைந்து விட்டார். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். அக்ஷய் குமார் தயார் மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

பிரபல நடிகரின் தாயார் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம் ! | Cinema Viral News