மகளுடன் நான் ஒருபோதும் நடிக்கமாட்டேன் - விஜய் சேதுபதி அதிரடி!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவருடைய இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக அறிமுகமான படம் 'உப்பென்னா'. இந்தப் படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூர வில்லனாகவும் நடித்தார். இவருடைய நடிப்புக்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இப்படம் கொரோனா சூழலிலும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
இதில், ஹீரோயினாக நடித்த கீர்த்தி ஷெட்டி நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும், இவர் பரதநாட்டிய கலைஞராவார். குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக கீர்த்தி மாறியுள்ளார். கலர்ஃபுல்லாக ஃபோட்டோஷூட் நடத்திய ஃபோட்டோக்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளனர்.
இதனை அறிந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஏனெனில், தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிப்பதை அவர் விரும்பவில்லை. இதனையடுத்து, வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளனராம். நடிகர் விஜய் சேதுபதியின் இந்த முடிவு திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.