‘மக்கள் செல்வன்’ நடிகர் விஜய்சேதுபதி செய்த செயல் - நெகிழ்ந்து போன நிருபர்!
தமிழ் திரையிலகில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடித்து 4 படங்கள் ரிலீஸுக்கு தயார் நிலையில் இருக்கின்றன. அதில் துக்ளக் தர்பார் இந்த வாரம் "விநாயகர் சதுர்த்தி அன்று நேரடியாக ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளிவர உள்ளது. மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய லாபம் திரைப்படம் செப்டம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இது தவிர ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. "திரையில் மட்டும் எதார்த்தமாக நடிப்பதோடு இல்லாமல் தரையிலும் சக மனிதர்களை நேசித்து கட்டியணைத்து முத்தம் இடும் அளவுக்கு எதார்த்தமாக பழகுவார். பொதுவாகவே சினிமா பிரபலங்கள் சாமானிய மக்கள் மட்டுமன்றி அவர்களின் ரசிகர்களிடம் கூட நெருங்கமாட்டார்கள்.
ஆனால் இந்த ஃபர்னிச்சரையெல்லாம் உடைத்தவர் விஜய் சேதுபதி. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஜீவாகரன் என்ற நிருபர் விஜய் சேதுபதியை இன்டர்வியூ எடுக்கச் சென்றார். அப்போது, இன்டர்வியூ எல்லாம் முடித்து விட்டு ஒரு போட்டோ எடுக்கலாம் என்று நினைத்தார் அந்த நிருபர்.
ஆனால் அவருக்கு கண்களில் வெள்ளை நிறத்தில் ஒரு தழும்பு உள்ளது. அதனால் தயக்கத்துடன் இருந்த அவர் அதனை மறைக்க கூலிங்கிளாஸ் தேடி இருக்கிறார்.
உடனே அதனை கவனித்த விஜய்சேதுபதி "டேய் உனக்கு இது தான்டா அழகு! வா நாம இதுவரை எடுக்காத போட்டோ ஸ்டில்ஸ் எல்லாம் எடுக்கலாம். என்று வழக்கம் போல அவருடைய ஸ்டைலிலேயே அன்புடன் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து அந்த நிருபருடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார்.
இதனை குறிப்பிட்ட நிருபர் ஜீவாகரன், அந்த நிகழ்வுக்குப் அப்புறம் என்னோட கண்ணுல இருக்க தழும்ப நான் பாசிட்டிவா எடுக்க ஆரம்பித்து விட்டேன். இதுக்கு முழு காரணம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் என்று மிகுந்த உற்சாகத்துடன் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.