‘பிக்பாஸ்’சில் சூப்பர் சிங்கர் பிரியங்கா - ரசிகர்கள் ஆச்சரியம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி 4 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்த 4 பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனையடுத்து, பிக்பாஸ் சீசன் 5 பற்றிய தகவல்கள் வரத் துவங்கி விட்டன. சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 2 புரொமோக்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு புரொமோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதன்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருக்கிறார் என்று சமூக வலைதளங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தகவல், பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், பிரியங்கா மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிளா இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.