‘நாய் சேகர்’ சர்ச்சை - சுராஜ் உடன் நடிகர் வடிவேலு... வைரலாகும் புகைப்படம்

cinema-viral-news
By Nandhini Sep 07, 2021 06:12 AM GMT
Report

தமிழ் சினிமாவின் அனைவராலும் கவரப்பட்ட நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவர் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அவர் புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. இதனால், அவர் படங்களில் எதிலுமே நடிக்காமல் இருந்தார். தற்போது அந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வடிவேலு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கத் தயாராகி இருக்கிறார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர்' என்ற படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலைப்பில் சிறு சிக்கல் ஏற்பட்டது. காமெடி நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பவித்ரா நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் உருவாக உள்ளது.

அந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ளார். அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் தலைப்பு வைத்ததாக கூறப்படுகிறது. நாய் சேகர் என்ற தலைப்பு ஏஜிஎஸ் நிறுவனம் கைவசம் இருப்பதாகவும், வடிவேலு அந்தப் பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, வடிவேலு படத்திற்கு நாய் சேகர் தலைப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவிக் கொண்டிருந்தது. இந்நிலையில், வடிவேலு தற்போது சுராஜ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ‘நாய் சேகர்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் வெற்றி என்ற சைகை காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே சுராஜ் வடிவேலு கூட்டணிக்கு ‘நாய் சேகர்’ டைட்டில் கிடைத்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.