விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி- பா.ரஞ்சித் தெரிவித்த முக்கிய தகவல்

cinema-viral-news
By Nandhini Sep 07, 2021 06:01 AM GMT
Report

கபாலி, காலா என ரஜினியை வைத்து இயக்கியவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவர் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவலை கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில், பா.ரஞ்சித் ஒரு பேட்டி ஒன்றை அளித்தார். அந்த பேட்டியில், நடிகர் விஜய்யை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படம் ஒன்றை இயக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

‘சூப்பர் ஹீரோ’ என்றால் கற்பனையான விசயங்களை எடுத்துக் கூறுபவர் கிடையாது. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் உள்ள தொடர்பின் அடிப்படையில் வைத்து ஒரு கதை தயாரித்துள்ளேன் என்று கூறினார். இயக்குநர் பா.ரஞ்சித் தனது வெற்றிப்படமான ‘அட்டகத்தி’ பட பாணியில் நட்சத்திரம் நகர்கிறது என்ற காதல் படத்தை இயக்கி வருகிறார்.

இதில் காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். முன்னதாக, இயக்குநர் பா.ரஞ்சித் விக்ரமை பா.ரஞ்சித் ஒரு படம் இயக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இப்போது நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்கப்போவது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தகவல் கொடுத்துள்ளார்.

நடிகர் விக்ரம், ‘கோப்ரா’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘மகான்’, மணிரத்னம் இயக்கத்தில் தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துவரும் விக்ரம் அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கு முன்பாக, விஜய் எனது இயக்கத்தில் நடிப்பதாக இருந்தால் அவரை சூப்பர் ஹீரோவாகத்தான் நடிக்க வைப்பேன். அதற்கு விஜய் ரொம்ப பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் மிஷ்கினும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி- பா.ரஞ்சித் தெரிவித்த முக்கிய தகவல் | Cinema Viral News