விற்பனைக்கு வந்த பிளாட்டை விவசாய தோட்டமாக்கிய நடிகை தேவயானி - விவசாயிகள் பாராட்டு

cinema-viral-news
By Nandhini Sep 06, 2021 05:14 AM GMT
Report

பிளாட்டாக மாற்றப்பட்ட விளை நிலத்தை வாங்கி, அதில் செண்டு மல்லி சாகுபடி செய்து வரும் நடிகை தேவையானியின் செயலுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன். இவர், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்.

சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் தேவயானி தம்பதிகள், அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், அவர்களது தோட்டத்துக்கு அருகே ஒருவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்காக பிளாட்டுகளாக மாற்றினார்.

இதனையறிந்த, தேவயானி அந்நபரிடம் 2 ஏக்கர் வீட்டு மனைகளையும் விலை கொடுத்து வாங்கினார். பின்னர், அதை விவசாய நிலமாக மாற்றி, தற்போது 2 ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டிருக்கிறார்.

தற்போது அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டு மல்லி பூத்துக் குலுங்குகிறது. விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், நடிகை தேவயானி, பிளாட்டுகளை விவசாய நிலங்களாக மாற்றி சாகுபடி செய்து வருவதை அப்பகுதி விவசாயிகள் பாராட்டி வருகிறார்கள்.

 விற்பனைக்கு வந்த பிளாட்டை விவசாய தோட்டமாக்கிய நடிகை தேவயானி - விவசாயிகள் பாராட்டு | Cinema Viral News