‘பிக்பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் - அதிகாரப்பூர்வ பட்டியல்?

cinema-viral-news
By Nandhini Sep 05, 2021 10:05 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கொரோனா பரவல் காரணமாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் ‘பிக் பாஸ் சீசன் 5’ புரொமோ வெளியானது. இந்த புரொமோவில் கோட் ஷூட்டில் இருக்கும் கமல்ஹாசன் சிரிப்புடன் ‘ஆரம்பிக்கலாமா’ என்று ‘பிக் பாஸ் சீசன் 5’ லோகோவை அறிமுகப்படுத்தினார். மேலும், நேற்று 2-வது புரொமோ வீடியோ வெளியானது. அதில், கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்களை மையப்படுத்தி இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பின்னர் பேசும் கமல், ஆயிரம் பொருத்தம் பார்த்து பண்ணும் கல்யாண வீட்லயே இவ்ளோ கலாட்டா இருக்கும் போது, வீடும் பெருசு, கலாட்டாவும் பெருசு. எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று புரொமோவில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது.

அதில் கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிளா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், தற்போது லேட்டஸ்ட் தகவலாக, நடிகை ஷகீலாவின் மகளும், திருநங்கையுமான மிளா பிக்பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்கேற்பது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

‘பிக்பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் - அதிகாரப்பூர்வ பட்டியல்? | Cinema Viral News