அட்லீ - ஷாருக்கான் படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா - புகைப்படம் வைரல்
புனேவில் இன்று தொடங்கி இருக்கும், ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியிருக்கிறார்.
பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை அட்லீ இயக்குகிறார். கடந்த 2 ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் இயக்குநர் அட்லீ தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, ‘தங்கல்’ புகழ் சான்யா மல்ஹோத்ரா நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்க உள்ளது.
படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகை நயன்தாரா மற்றும் நடிகை ப்ரியாமணி புனே சென்றுள்ளனர். இருவரும் புனேவில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
