இன்ஸ்டாகிராமில் இணைந்த 3 வருடங்களிலேயே 13 மில்லியன் ஃபாலோயர்ஸ் : விஜய் தேவரகொண்டா புதிய சாதனை

cinema-viral-news
By Nandhini Sep 03, 2021 08:47 AM GMT
Report

இன்ஸ்டாகிராமில் இணைந்த 3 வருடங்களிலேயே 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்ற தென்னிந்திய நடிகர் என்ற சாதனையை நடிகர் விஜய் தேவாரகொண்டா படைத்துள்ளார்.

‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் கவனம் ஈர்த்தார் நடிகர் விஜய் தேவாரகொண்டா. இவருக்கு ஆண் ரசிகர்களை விட, பெண் ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம்தான் இன்ஸ்டாகிராமில் விஜய் தேவாரகொண்டா இணைந்தார்.

இணைந்து 3 வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள், 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்றுள்ளார். தென்னிந்தியாவிலேயே அதிக ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட நடிகர்களில் நடிகர் அல்லு அர்ஜுன்தான் முதலிடத்தில் இருக்கிறார்.

அவரும் 13 மில்லியன் ஃபாலோயர்களை சமீபத்தில்தான் பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக விஜய் தேவரகொண்டா இருந்து வந்தார். ஆனால், தற்போது அல்லு அர்ஜுன் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இன்ஸ்டாவில் இருந்து வருகிறார்.

அவருக்குப் பின்னர், இன்ஸ்டாவில் இணைந்து தற்போது, குறைந்த நாட்களிலேயே 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்று அல்லு அர்ஜுனுடன் சமமான ஃபாலோயர்ஸ்களைப் பெற்றுள்ளார் விஜய் தேவரகொண்டா.

இன்ஸ்டாகிராமில் இணைந்த 3 வருடங்களிலேயே 13 மில்லியன் ஃபாலோயர்ஸ் : விஜய் தேவரகொண்டா புதிய சாதனை | Cinema Viral News

இன்ஸ்டாகிராமில் இணைந்த 3 வருடங்களிலேயே 13 மில்லியன் ஃபாலோயர்ஸ் : விஜய் தேவரகொண்டா புதிய சாதனை | Cinema Viral News