கண்ணீர் அஞ்சலி போஸ்டர் : கடுப்பான சித்தார்த் டுவிட்டரில் பதிலடி

cinema-viral-news
By Nandhini Sep 03, 2021 07:11 AM GMT
Report

நடிகர் சித்தார்த் பின்னணிப் பாடகர் மட்டும் இல்லை திரைக்கதை எழுத்தாளரும் கூட. சென்னையில் பிறந்த இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்தார்.

தனது முதல் படமான ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக நடிகர் சித்தார்த் வலம் வருகிறார்.

இவர் சமூக வலைத்தள பக்கத்தில் அரசியல் ரீதியாக பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இவரது கருத்துகளுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாக வைரலான புகைப்படம் ஒன்றை நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், குறிப்பிட்டவர்களின் வெறுப்பு மற்றும் தொல்லை. இதில் நாம் எதற்கு குறைக்கப்பட்டுள்ளோம் என அவர் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த சிலர் இது தவறுதலாக நடத்திருக்கும் என தெரிவித்து வருகின்றனர்.

அதாவது பிக்பாஸ் 13 வெற்றியாளர் சித்தார்த் சுக்லா, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அவருக்கு வயது 40. நேற்று காலை அவர் மாரடைப்பால் மும்பையில் உயிரிழந்தார். அவருக்கு பதிலாக நடிகர் சித்தார்த்தின் படத்தை வைத்திருக்கலாம் என ரசிகர்கள் பல பேர் கமெண்ட் செய்து வருகின்றனர்.