ரஷ்யாவில் 5000 கிலோமீட்டர் பைக்கில் சுற்றுப்பயணம் செல்லும் நடிகர் அஜீத் - புகைப்படங்கள் தெறிக்க விட்ட ரசிகர்கள்

cinema-viral-news
By Nandhini Sep 03, 2021 05:10 AM GMT
Report

நடிகர் அஜீத், எச் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில், வலிமை படத்தின் இறுதி கட்ட காட்சிகளை படக்குவதற்காக சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் ரஷ்யா சென்றார்கள். அப்போது, வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதையடுத்து, வலிமை படக்குழுவினர் சென்னை திரும்பி இருக்கிறார்கள். ஆனால், நடிகர் அஜீத் இன்றும் சென்னை திரும்பவில்லை.

அவர் பைக்கில் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜீத் அடிக்கடி பைக்கில் சுற்றுப்பயணம் செல்வது வழக்கமான ஒரு விஷயம். அவர் கலந்துகொள்ளும் படப்பிடிப்புத் தலங்களுக்கு அருகில் உள்ள இடங்களுக்கு அவர் பைக்கில் சுற்றுப்பயணம் செல்வார்.

தற்போது, ரஷ்யாவின் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார் நடிகர் அஜீத். அங்கு கிட்டத்தட்ட 5000 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. நடிகர் அஜீத் ரஷ்யாவில் பயணம் செய்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வலிமை படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரஷ்யாவில் 5000 கிலோமீட்டர் பைக்கில் சுற்றுப்பயணம் செல்லும் நடிகர் அஜீத் - புகைப்படங்கள் தெறிக்க விட்ட ரசிகர்கள் | Cinema Viral News