மனசார வாழ்த்திய சமந்தா... கண்டுக்காத நாகர்ஜுனா - அப்போ... விவாகரத்து உண்மையா?
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான நாகர்ஜுனா ஆகஸ்ட் 29-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தார்கள்.
அதில் குறிப்பாக நாகர்ஜுனாவுக்கு மகன் நாக சைதன்யா மற்றும் மருமகள் சமந்தா ஆகியோரும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தனர். அதில் நாக சைதன்யா, காஜல் அகர்வால், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரின் ட்வீட்டுகளுக்கு நாகர்ஜுனா நன்றி தெரிவித்து பதில் அளித்தார்.
ஆனால், மருமகள் சமந்தாவின் ட்வீட்டுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. அதை பார்த்தவர்களோ, அப்படி என்றால் நாக சைதன்யாவும், சமந்தாவும் விவாகரத்து பெறப் போவது உண்மை தான் போன்று என்கிறார்கள்.
நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையை பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதனையடுத்து, அவர்கள் விவாகரத்து பெறுவது என்று முடிவு செய்துள்ளனராம்.
இதனையடுத்து, நாக சைதன்யா சமந்தாவை பிரிந்து தன் அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டார் என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. நாகர்ஜுனாவின் பிறந்தநாளுக்கு சமந்தா வாழ்த்தி ட்வீட் செய்வாரா? மாட்டாரா? என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் தனது மாமானாரை உயர்வாக பேசி வாழ்த்தினார்.
ஆனால் நாகர்ஜுனா அதற்கு பதில் அளிக்கவில்லை. நாக சைதன்யா, சமந்தா தம்பதிக்கு இடையேயான பிரச்சனையை தீர்த்து வைக்க நாகர்ஜுனா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், அது தோல்வி அடைந்ததாகவும் தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்த கோபத்தில் தான் அவர் சமந்தாவின் ட்வீட்டுக்கு பதில் அளிக்கவில்லை என்று செய்தி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.