ப்ப்பா... யார்ரா இது... நிஷாவா... தீயாய் பரவும் போட்டோ ஷூட் வீடியோ! கிண்டலடித்த நெட்டிசன்கள்

cinema-viral-news
By Nandhini Aug 31, 2021 11:17 AM GMT
Report

விஜய் டிவியின் பல்வேறு காமெடி மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார் அரந்தாங்கி நிஷா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிஷா ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.

இருந்தாலும், அவரது தோற்றம் மற்றும் நிறம் குறித்து அவ்வப்போது கேலி, கிண்டல்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், தற்போது இவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நிஷா அதிகம் மேக்கப் போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் கிண்டல் செய்து வருகிறார். ‘பெயிண்ட் அடிப்பதை குறையுங்கள்’ என்றும், எந்த பிராண்ட் பெயிண்ட் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் உங்கள் உண்மையான கலர் தான் அழகு, இப்படி எல்லாம் செய்யாதீங்க என்று அறிவுரை கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் அதிகமாக பரவி வருகிறது.