நடிகர் விஜய் சிறுவயதில் கிருஷ்ணன் வேடமிட்ட புகைப்படம் செம்ம வைரல்!

cinema-viral-news
By Nandhini Aug 31, 2021 08:44 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில், இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

சமீபத்தில் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தளத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சென்று தளபதி விஜய்யை சந்தித்தார். இவர்கள் இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், நேற்று கிருஷ்ணா ஜெயந்தி என்பதால் நடிகர் விஜய் சிறுவயதில் கிருஷ்ணன் வேடத்தில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் -  

நடிகர் விஜய் சிறுவயதில் கிருஷ்ணன் வேடமிட்ட புகைப்படம் செம்ம வைரல்! | Cinema Viral News