நடிகை திரிஷாவிற்கு விரைல் டும் டும் டும்? சந்தோஷத்தில் குடும்பத்தினர்

cinema-viral-news
By Nandhini Aug 29, 2021 11:24 AM GMT
Report

நடிகர் சூர்யாவின் ‘மவுனம் பேசியதே’ படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை திரிஷா.

இதைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை ஆகிய படங்களில் கைவசம் உள்ளது. ஆனால், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை தவிர மற்ற 2 படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளியாக தயாராகி இருக்கிறது.

இதனையடுத்து, நடிகை திரிஷா வேறு எந்த புதிய படங்களிலும் கமிட்டாகவில்லை. இந்நிலையில், நடிகை திரிஷாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக தான், நடிகை திரிஷா, புது படங்களில் கமிட்டாகவில்லை என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

நடிகை திரிஷாவிற்கு விரைல் டும் டும் டும்? சந்தோஷத்தில் குடும்பத்தினர் | Cinema Viral News