ஏழை எளிய மக்களுக்காக ‘விஜய் விலையில்லா விருந்தகம்’ - விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடங்கினர்

cinema-viral-news
By Nandhini Aug 29, 2021 11:04 AM GMT
Report

ஏழை, எளிய மக்களுக்காக இலவசமாக உணவளிக்கும் ‘விஜய் விலையில்லா விருந்தகம்’ தஞ்சாவூர் மற்றும் சென்னையைத் தொடர்ந்து தற்போது விருதாச்சலம் மற்றும் திருச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தினரால் தொடங்கியுள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் முன்பிருந்தே தஞ்சாவூரில் ‘விஜய் விலையில்லா உணவகம்’ ஆரம்பிக்கப்பட்டது. இதனால், ஏழைகளுக்கு 3 வேளை உணவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள் தஞ்சை விஜய் மக்கள் இயக்கத்தினர்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக இவர்களின் பணி தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தென்சென்னையிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ‘விஜய் விலையில்லா விருந்தகம்’ ஆரம்பித்து உணவளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது திருச்சி மற்றும் விருதாச்சலத்திலும் ‘விஜய் விலையில்லா விருந்தகத்தை’ தொடங்கி ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

இந்நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு துவங்கி வைத்தார். விஜய் மக்கள் இயக்கத்தினர் கொரோனா தொற்று பரவல் ஊரடங்கில் ஆதரவற்ற மக்களும், ஏழை, எளிய மக்களுக்கும் பல்வேறு மாவட்டங்களில் உணவு, மளிகைப்பொருட்கள், காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை எளிய மக்களுக்காக ‘விஜய் விலையில்லா விருந்தகம்’ - விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடங்கினர் | Cinema Viral News