நமீதாவை ‘கிஸ்’ அடித்த ரோபோ சங்கர்! ‘மனுசனுக்கு மச்சம்யா’ வயித்தெரிச்சலில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் சரத்குமாருடன் ‘அர்ஜுனா அர்ஜூனா அம்பு விடும் அர்ஜுனா’ என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்தவர் நடிகை நமீதா.
இவர் விஜயகாந்த், அஜீத், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். ஆனால், நமீதாவுக்கு உடல் எடை அதிகரித்ததால் சினிமா வாய்ப்புகளை இழந்தார். எனவே, சின்னத்திரை பக்கம் ஒதுங்கி ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
பிறகு, திருமணம் செய்து கொண்ட நமீதா தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சில வருடங்கள் அமைதியாக இருந்த அவர் திடீரென பாஜகவில் இணைந்தார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்துள்ளார் நமீதா.
இந்நிலையில், ‘ஜீ’ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியல் மூலம் நடிகை நமீதா ரீ-என்ட்ரீ கொடுக்க இருக்கிறார். இதனையடுத்து, கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘கன்னித்தீவு’ என்கிற தொடரிலும் அவர் நடிக்க இருக்கிறார்.
இதில் அவருடன் ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலரும் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில், நமீதாவின் கையில் ரோபோ சங்கர் முத்தம் கொடுக்கும் புகைப்படம் புரமோஷனுக்காக கலர்ஸ் டிவி வெளியிட்டிருக்கிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘மனுசனுக்கு மச்சம்யா’ என வயித்தெரிச்சலோடு சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

செம்மணியில் மனதை உருக வைக்கும் சம்பவம் : குழந்தையை அரவணைத்தவாறு கிடந்த எலும்புக்கூட்டு தொகுதி IBC Tamil
