60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய அஜித் - இதுவரை யாருக்கும் தெரியாத தகவல் வெளியானது!

cinema-viral-news
By Nandhini Aug 29, 2021 07:45 AM GMT
Report

தமிழ் திரையுலகில் நடிகர் அஜீத், "தல", "அல்டிமேட் ஸ்டார்", "காதல் மன்னன்" என்ற பெயர்களில் ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

தமிழில் ஒரு முன்னணி நடிகராகவும், சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும், உலகளவில் பிரபலமான ஒரு எஃப் 1 ரேஸர் (F1 Racer) மற்றும் ஒரு பொறியாளராக புகழ் பெற்று வருகிறார் அஜீத். அஜீத் குமார், சினிமாவை தொடர்ந்து தனது வாழ்வில் பல துறைகளில் பங்களித்து பணியாற்றி வருகிறார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராகவும், உலகளவில் பல போட்டிகளில் பங்குபெற்ற ஒரு எஃப் 1 ரேஸர் (F1 Racer) மற்றும் 2018ம் ஆண்டு தமிழக மாநில அளவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கு பெற்று புகழ் பெற்றிருக்கிறார். நடிகர் அஜீத்திடம் யாராவது ஒருவர் கஷ்டப்படுகிறேன் என்று கூறினால், உடனே தன்னால் முயன்ற உதவிகளை செய்துவிடுவார்.

அப்படி தான் 2010ம் ஆண்டு 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் நடிகர் அஜீத். அது என்னவென்றால், 60 குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்து அவர்களின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்.

அந்த செய்தி, புகைப்படத்துடன் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படங்கள் வெளியானதால் தல ரசிகர்கள் அனைவரும் டுவிட்டரில் தெறிக்க விட்டு கொண்டாடி வருகிறார்கள்.