ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு பாராட்டு விழா நடத்திய நடிகர் சிரஞ்சீவி! புகைப்படங்கள் வைரல்
நடைபெற்று முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு நடிகர் சிரஞ்சீவி பாராட்டு விழா நடத்தியிருக்கிறார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
முன்பு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றால் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, 2 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமை சிந்துவிற்கே சேரும்.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்றுக்கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்ற சிந்து பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.
தற்போது, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பிவி சிந்து பதக்கம் வென்றதற்காக விருந்துடன் கூடிய பாராட்டு விழாவை நடத்தியிருக்கிறார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சிரஞ்சீவியின் நண்பர்கள், நடிகைகள் ராதிகா, சுகாசினி மணிரத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். மேலும், அவர்கள் சிந்துவுடன் அவர் வாங்கிய பதக்கத்தை கையில் ஏந்தியும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

