சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு - கேக் வெட்டிக் கொண்டாடிய விஜய் சேதுபதி, நயன்தாரா! வைரல் புகைப்படம்
'காத்து வாக்குல ரெண்டு காதல்' பட படப்பிடிப்பில் சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு செய்யப்பட்டதற்கு கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற படம் உருவாகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிசேரியில் நடந்து வருகிறது. எனவே விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் பாண்டிச்சேரியில் உள்ளனர். ‘சமந்தா பேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் நடித்ததற்காக மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் வெப் சீரிஸ் பிரிவில் சிறந்த நடிகையாக நடிகை சமந்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, நடிகை சமந்தாவுக்கு பலர் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் சமந்தா சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அதை படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடி இருக்கிறார்கள்.
அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

